என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேவாரம் யானை"
உத்தமபாளையம்:
தேவாரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் மக்னா யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் சில உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளது.
எனவே இந்த யானையை வனத்துறையினர் விரட்டவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து தனிப்படை வந்தது. இருந்தபோதும் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது இந்த மக்னா யானையின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளது.
தேவாரம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தோட்டத்திற்குள் புகுந்த மக்னாயானை மாமரங்களை பிடுங்கி வீசியது. அப்பகுதியில் இருந்த மாட்டுக் கொட்டகையை சேதப்படுத்தி சென்றுவிட்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அலுவலர் ஜீவனா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
மக்னா யானையின் அட்டகாசத்தால் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். எனவே இந்த யானையை விரைந்து பிடிக்கவேண்டும் என வலியுறுத்திஉள்ளனர்.
உத்தமபாளையம்:
தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பெரம்பட்டி, சாக்கலூத்து ஆகிய பகுதிகளில் மக்னா யானை விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் உடனே பிடித்து கேரளாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து வேட்டை தடுப்பு காவலர் குழு வந்துள்ளது.
இவர்கள் முதல் கட்டமாக யானையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கால் தடம், சத்தம், இரை நடைவேகம், சாணம் ஆகியவற்றை வைத்து ஒற்றை யானை மக்னா யானை அல்ல. பெண் யானை என முடிவு செய்துள்ளனர். ஆனால் யானை எதற்காக ஆக்ரோஷமாக சுற்றித் திரிகிறது. என்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.
ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக தேனி மாவட்ட கலெக்டர், வன அதிகாரி ஆகியோர் எடுத்த முடிவின் படி மத்திய வன அதிகாரியின் உத்தரவுக்காக இந்த வேட்டை தடுப்பு குழுவினர் காத்திருக்கின்றனர். உத்தரவு கிடைத்தவுடன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கை தொடங்கும் என வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்